அரசு பேருந்து தொடர்பான குறைகள், புகார்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு கட்டணமில்லாத 1800 599 1500 எனும் தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என பொதுமக்கள், பயணிகள் தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் 149 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதவி மையத்தின் இந்த மூன்று இலக்க எண்ணில் குறைகள் மற்றும் புகார்கள தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.