உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் உள்ள ஆதி குரு சங்கராச்சார்ய பீடத்தில் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் மஹா ஆரத்தியில் பங்கேற்ற ராகுல் காந்தி அங்குள்ள மக்களிடம் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தேநீர் விநியோகித்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.