தற்போது பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளும், பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளும், இருக்கலாம்.
ஆனால், டிவியின் பயன்பாடு தொடங்கிய காலத்தில் அனைவரது வீடுகளிலும் ஒளித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி என்றால் அது பொதிகை டிவி தான்.
இந்த டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒளியும், ஒலியும் ஆகிய நிகழ்ச்சிகள் இன்றளவும் பலரது நினைவில், தேங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், இந்த பொதிகை டிவியின் பெயர், மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், வரும் பொங்கல் பண்டிகை அன்று, பொதிகையின் டிவியின் பெயர் DD தமிழ் என்று மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், டிடி தமிழ் தொலைக்காட்சியில், விவாதம் தொடர்பான ஷோக்கள் ஆரம்பிக்கப்பட்டு, புதுப்பொழிவுடன் செயல்பட உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த ஒரு சில நெட்டிசன்கள், தமிழில் உள்ள பெயரை மாற்றம் செய்வதற்கான காரணம் என்றும், முதலில் இருந்த பெயரே சிறப்பாக உள்ளது என்றும், தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ஒருசிலர், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றும், தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.