நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா 2 திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று, திருவெற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சந்திரமுகி 2 வெற்றி பெறவும் கோவிலுக்கு சென்று கும்பிட்டார் என்பது நினைவு கூறத்தக்கது” என்று கூறியுள்ளார். இவரது இந்த நக்கலான பதிவு, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.