ஒரே இரவில் கோடீஸ்வரரான மீன் வியாபாரி….எப்படி தெரியுமா??

பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர் மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து “சோவா” என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர். தாங்கள் பிடித்த மீன்களை கராச்சி துறைமுகத்தில் ஏலம் விடுத்தபோது முழு மீன்களும் சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.

பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

இந்த அறிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மீன் பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடியது. மேலும் இந்த மீன் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News