மனைவி பிரிந்த சோகத்தில் மது குடித்தே உயிரை மாய்த்த நபர்..!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த தலக்குளம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பெட்ரோல் பங்க் ஊழியரான இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், 14-வயதில் ஒரு மகனும் 12-வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

குடிபோதைக்கு அடிமையான இவரை பிரிந்த இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். உறவினர்கள் மூலம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சிவகாமி வர மறுத்துள்ளார். இதனால் கருணாகரன் மனமுடைந்து விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரன் அழுகிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், கருணாகரன் அதீத மது போதையால் உயிரிழந்தாரா? அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News