நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது.
இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தனிப்படை அமைத்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் – 178, அரும்பாக்கம் – 159, ராயபுரம் – 115, வேளச்சேரி – 117 எனச் சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியுள்ளது.