போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இவர் தனது அடுத்த படத்தை, அஜித்தை வைத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படம் தொடங்கப்படாமல் போனது.
இருப்பினும், மனம் தளராத அவர், தனது அடுத்த புராஜெக்ட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம். இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.