உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதையில் 150 மீட்டர் நீள பகுதி சரிந்து விழுந்தது. இதில், சுமார் 40 பணியாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மீட்பு படையினர், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்தின் மேற்பகுதியில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு இடர்பாடுகளை அகற்றிய பிறகே, அவர்களை மீட்க முடியும் என்று மாநில மீட்பு படை அதிகாரி மணிகந்த் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.