தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
சென்னையில் தீபாவளியையொட்டி டன் கணக்கில் குவிந்த பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள் கிழமை இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 200 டன் வரை பட்டாசுக் கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மட்டும் 19,600 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.