நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
விதிகளை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 118 வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 133 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் 44 வழக்குகளும், திண்டிவனம் கோட்டத்தில் 25 வழக்குகளும், செஞ்சி உட்கோட்டத்தில் 25 வழக்குகளும், கோட்டகுப்பம் உட்கோட்ட காவல் நிலையங்களில் 39 வழக்குகளும் என மொத்தம் 133 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.