வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 22 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 278 கனஅடியாக அதிகரித்துள்ளது.
3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 3118 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.