அக்டோபர் மாத மத்தியில் இருந்து டிசம்பர் மாதம் இறுதி வரை, வடகிழக்கு பருவமழை காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தின் மழையின் அளவு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதல், சென்னை, டெல்டா மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா நோக்கி சென்றாலும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.