ஹீரோயினாக நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை, முதன்மை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருபவர் த்ரிஷா.
இவர் சமீபத்தில் விஜயின் லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம், 500 கோடிக்கும் மேல் வசூலித்து, பெரும் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, த்ரிஷா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.
அதாவது, 4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த த்ரிஷா, தற்போது 10 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். இந்த தகவலை அறிந்த சினிமா தயாரிப்பாளர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.