விடாமுயற்சியில் அர்ஜூனின் கதாபாத்திரம் இதுவா? அப்ப ரகளை கன்ஃபார்ம்!

மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில், லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷீட்டிங், முடிவடைந்தது.

இந்நிலையில், இப்படத்தில் அர்ஜூன் ஏற்று நடிக்க உள்ள கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு முன்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா படத்தில், இரண்டு பேரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News