கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்யும் பணி – 4 தொழிலாளர்கள் பலி!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் குஜராத்தில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நேற்று மாலை நடைபெற்ற இந்த பணியில் பிஹாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கழிவுநீர்த்தொட்டிக்குள் முதலில் இறங்கிய 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்த நிலையில் வெளியில் இருந்த மற்ற இரண்டு தொழிலாளர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். அப்போது அவர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்துள்ளனர்.

கழிவுநீர்த்தொட்டிக்குள் மயங்கிய நான்கு தொழிலாளர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 4பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News