முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

முதல் தலைமுறை வாக்காள இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மத்தியப் பிரதேசத்தில் அனைத்து தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் உற்சாகத்துடம் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் நேர்ந்திர மோடி, முதல் தலைமுறை வாக்காள இளைஞர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் சாதனை படைக்கும் பங்களிப்பை வலியுறுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்துமாறும், ஒவ்வொரு வாக்கும் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை என மோடி வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News