கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய போது மின்சாரத்தை அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி குமாரசாமி மீது மின் திருட்டு வழக்கு பதிவு செய்தது. போலீசார் எப்.ஐ..ஆர்., பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த குமாரசாமி மின் திருட்டு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும், மின் அலங்கார பணி ஒப்பந்தகாரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது தவறு தான் எனவும் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
ஒப்பந்தகாரர் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மின் விநியோக நிறுவனத்திற்கு ரூ. 68 ஆயிரத்து 526 ஐ அபராதமாக செலுத்தியுள்ளேன் என்றார்.