ஒவ்வொரு நாட்டிற்கும், கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. எனவே, இந்த போட்டிக்கான முடிவை அறிவிப்பதில், ஐசிசி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஆனால், சென்ற முறை நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது, முடிவுகள் சரியாக அறிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அதாவது, இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் மோதின. ஆனால், கடைசி நேரத்தில் போட்டி சமன் செய்யப்பட்டது.
அதன்பிறகு, சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் போட்டி சமன் செய்யப்பட்டதால், அதிக பவுண்டரிகள் அடித்த அணிக்கு, கோப்பை வழங்கப்பட்டது. இது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால், இந்த முறை இந்த தவற நடக்கக் கூடாது என்பதில், மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த முறை போட்டி சமன் செய்யப்பட்டால், சூப்பர் ஓவர் வைக்கப்படும். சூப்பர் ஓவர் சமன் செய்யப்பட்டால், மீண்டும் இன்னொரு சூப்பர் ஓவர் வைக்கப்படும். அதாவது, முடிவு தெரியும் வரை, தொடர்ச்சியாக சூப்பர் ஓவர் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், மழையின் காரணமாக போட்டி நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அன்று, தொடங்கப்பட்ட உலகக் கோப்பை தொடர், தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த போட்டியின் இறுதி ஆட்டம், வரும் 19-ஆம் தேதி அன்று, மும்பையில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ள இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள், பெரும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.