இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நிகழ்வில் இணைந்து இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.