நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து, ஆபாசமாக கருத்து கூறியிருந்தார்.
இதற்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன், பாடகி சின்மயி என்று பல்வேறு தரப்பினர், கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான முறையில், மன்சூர் அலிகான் கூறிய கருத்து, கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து, ஐ.பி.சி பிரிவு 509 பி-ன் படி, வழக்கு பதிவு செய்ய, டிஜிபி-க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இதுமாதிரியான கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, சாதாரணமாக்கும் என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி வருகின்றனர்.