அசுரன் படத்திற்கு பிறகு, இயக்குநர் வெற்றிமாறன், சூரியை வைத்து, விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து, நடிகர் சூர்யாவை வைத்து, வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, சில திரைப்படங்களுக்கு, கதை, திரைக்கதை எழுதி வருகிறார்.
அந்த வகையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில், அதிகாரம் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. இதில், நடிகர் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, இந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.