தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக, 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.