அனைத்து ஆவின் பால் பாக்கெட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்படும்!

மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்விதத் தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் பால் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்), நிறை கொழுப்புப் பால் (ஆரஞ்சு நிறம்) ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும், அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே மாதம் முதல் சென்னையில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவூட்டப்பட்ட டிலைட் பால் (ஊதா நிற பாக்கெட் – 3.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ளது) அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்விதத் தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News