திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் – 2700 சிறப்பு பேருந்துகள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு மறுநாளான 27ஆம் தேதி பௌர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க திருவண்ணாமலைக்கு வ்ருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வரும் 25 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News