காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியில் இருந்து போர் நடந்து வருகிறது.

முதலில் ஹமாஸ் ஆரம்பித்த இந்த போரில், 1200-க்கும் மேற்பட்டோரும், அதன்பிறகு, இஸ்ரேல் தாக்கியதில், 13 ஆயிரம் பேரும், இதுவரை உயிரிழந்துள்ளனர். இருதரப்பிலும், பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

40 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த போரில், போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பே இல்லை என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விடாப்பிடியாக கூறி வந்தார்.

ஆனால், தற்போது, 4 நாட்களுக்கு, போர் நிறுத்தம் செய்வதாக, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

பினைக் கைதிகளை விடுவிப்பதற்காக தான், இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், நிரந்தர போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேலுக்கு எதிரான சக்திகளும் ஒழியும் வரை, தொடர்ச்சியாக போர் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News