Connect with us

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது!

தமிழகம்

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் ஒன்றிணைந்து காவிரி நீர் பங்கீட்டை செய்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், நவம்பர் 23-ந் தேதி வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் கடந்த 3 ஆம் தேதி கூடிய காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை உடனடியாக செயல்படுத்த கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட நாளான நவம்பர் 23ஆம் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்துவரும் நாட்களுக்கான நீர் திறப்பு குறித்து முடிவெடுக்க மீண்டும் காவிரி ஒழுங்காற்றுக்குழு இன்று கூடுகிறது.

காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

More in தமிழகம்

To Top