தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்நாட்டின் 11வது கவர்னராக கடந்த 1997 முதல் 2001 வரை பதவி வகித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 1927 ஏப்.,30ல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். 1950 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார்.
1983 ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
பாத்திமா பீவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.