திடீரென முடங்கிய IRCTC இணையதளம்…பயணிகள் அவதி..!!

ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தொழில்நுட்ப காரணங்களால் இ-டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News