பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கடைசிநாள் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைப் போல வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
ராஜஸ்தானில் இருக்கக்கூடிய எந்தப் பெண்ணும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதும் நமது தாய்மார்களும், சகோதரிகளும் பாஜக கொடியினை ஏந்திச் செல்வதைக் காண முடிகிறது.
எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரிவதில்லை.
ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.