தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் ஆங்காங்கே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
வாகன ஒட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குன்னூர் ஊட்டி சாலையில் பாலவாசி அருகே வாகனங்கள் செல்லும் போதே மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ஊட்டி குன்னூர் இடையே உள்ள ரயில் பாதையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.