கவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி!

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். இவர் அடுத்ததாக, நடிகர் கவினை வைத்து ஸ்டார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, தயாரிப்பு பணிகளையும் அவரே செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

மேலும், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து, டீசர், டிரைலர், இசை வெளியீட்டு விழா ஆகிய புரமோஷன் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News