தமிழ் மொழியை போற்றும் வகையில், மத்திய அரசு சார்பில் காசி மகா சங்கமம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக சார்பில் பல்வேறு தலைவர்கள், மணவர்கள் ஏரளமானோர் இந்நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தமிழக பாஜக அண்டை மாநில மற்றும் வெளிநாடு வாழ் தலைவராக உள்ள காயத்திரி ரகுராமுக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் இருந்த இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர்களை குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தார். எனவே கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 6-மாதம் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
இச்சூழலில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது, டிவிட்டர் பக்கத்தில் புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அதாவது கடந்த 3-மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முட்டாள்களுக்கு பதிலளிக்க விரும்வில்லை என பதிலடி கொடுத்துள்ள காய்த்திரி, திமுக குறித்தான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.