வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம்

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவப்பட்ட தினமான டிசம்பர் 3ஆம் தேதி அன்று 5 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3 (ஞாயிறு) அன்று க்யூஆர் பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த க்யூஆர் கோடுகளை வைத்து, பே.டி.எம்(paytm), வாட்ஸ்அப் பே(whatsapp), ஃபோன்பே(phonepe) ஆகிய மூன்று செயலிகளில் பயணச்சீட்டுகள் எடுத்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

RELATED ARTICLES

Recent News