திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதிச்சீட்டைப் பெற பக்தர்கள் முண்டியத்துக் கொண்டு வருவதால் பக்தர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதில் ஒரு சில பக்தர்கள் சுற்றுச்சுவர் ஏறி குதித்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டது. இதனால் பக்தர்களை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.