ஹைதரபாத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்திற்கு வருகை புரிந்தார்.
ஹைதராபாத் அருகேவுள்ள கன்ஹா சாந்தி வனம் எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, ஆந்திர மாநிலம் திருப்பதி சென்றார்.
அங்கு அவரை ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, மற்றும் பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்தார். அங்கு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உட்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கோயிலுக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கே சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்கி பண்டிதர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.