சோகத்தில் மூழ்கிய கிராமம்: பள்ளி வாகனம் மோதி சிறுமி பலி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்த பிறகு பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது லயாவை பள்ளி பேருந்து ஓட்டுநர் இயக்கி விட்டதாக கூறப்படுகிறது.
லயா பேருந்தின் பின்புறம் இருந்ததை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கிய போது பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் பள்ளி பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும், கிளீனர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News