வெள்ள அபாய எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 22.29 அடியும், மொத்த கொள்ளளவு 3195 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 452 கன அடியும், சென்னை குடிநீர் மற்றும் உபரி நீர் என 163 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி 23 அடியை நெருங்குவதால் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் கூடுதலாக 175 கன அடி திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 25 கன அடி உபரி நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனை உயர்த்தி தற்போது உபரி நீரை 200 கன அடியாக திறந்து விட்டனர். இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில் 3 செட்டர்களின் வழியாக உபரி நீரானது சீறிப்பாய்ந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை மழை மற்றும் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்
கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் எனவும் தொடர்ந்து நீர் மட்டம் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News