ரொம்ப நாளா ஜிமெயில் அக்கவுண்ட் யூஸ் பண்ணலையா?? உங்களுக்கான அதிர்ச்சி செய்தி

கூகுள் நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய முக்கியமான இணைய சேவையாக உள்ளது. Gmail, Drive, Docs, Meet, Calendar, Photos மற்றும் YouTube உள்ளிட்ட நிறுவனத்தின் பிற ஆப்ஸ்களை பயன்படுத்த Google கணக்கு தேவைப்படுகின்றன.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் முக்கிய தகவலை பகிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத அனைத்து கூகுள் கணக்குகளும் டிசம்பர் 1 முதல் நீக்கப்படும் என்று கூறி உள்ளது. இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

உங்கள் வேலை, பள்ளி அல்லது பிற அமைப்பு மூலம் உங்களுக்காக அமைக்கப்பட்ட எந்தக் கணக்கும் தானாக நீக்கப்படாது.

RELATED ARTICLES

Recent News