ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே.டி.ராகவனுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முக்கிய பதவியை வழங்கியுள்ளார்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக கே.டி ராகவன், ஊடக விவாதங்களில் பங்கேற்று வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஆபாச வீடியோவில் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக விலகினார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.