தனியாக இருந்த பெண்கள்.. மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள்.. அதிர்ச்சி வீடியோ!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு இந்திராணி, தனது மகள்களுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், இந்திராணி அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளனர்.

பின்னர், தங்களது கை ரேகைகளை அகற்றிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த இரண்டு மர்ம நபர்களும், தங்க நகைகைளை பறித்துச் செல்லும், அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள், இணையத்தில் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News