சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 21-ல் தொடங்கியது. தொடக்கத்தில் மந்த நிலையில் இருந்த மழைப் பொழிவு நவம்பர் மாதத்தில் வலுவடைந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று காலைமுதல், இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். அத்துடன், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தற்போது மழைநீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று இரவு பெய்த கனமழையால், மழைநீர் தேங்கிய 145 இடங்களில், 68 இடங்களில் தற்போது முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News