செம்பரம்பாக்கம் உபரிநீர் திறப்பு 6000 கன அடியாக உயர்வு!

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை 10 மணி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.53 கன அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3000 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஏரியில் இருந்து 2429 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது 6000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News