தெலங்கானா தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது.

நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலத்தின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைற்று வருகிறது.

இந்த தேர்தலில், ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இது தவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

RELATED ARTICLES

Recent News