தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
நவம்பர் 30(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அதோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.