உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், ஒரு விரைவு ரயிலின் ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை விட்டு இறங்கி சென்றுள்ளார்.
இதேபோல் மற்றொரு விரைவு ரயிலின் ஓட்டுநரும் உடல்நிலை சரியில்லை என்று கூறி ரயிலை விட்டு இறங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.Barabanki
நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், குடிநீர், உணவு, மின்வசதி இல்லாமல், ரயிலில் பயணம் செய்த 2500 பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து பயணிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அருகில் இருக்கும் ரயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு மாற்று ரயில்களை அமைத்து தந்தனர்.