உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (வயது 46). சிறு வயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
1980களில் இந்தி நடிகைகள் நீளமான முடி அலங்காரம் செய்திருப்பார்கள். அவர்களால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, இப்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.