செம்பரம்பாக்கம் உபரி நீரில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த குடும்பம் உயிருடன் மீட்கப்பட்டன.
நேற்று இரவு 11 மணியளவில் செம்பரம்பாக்கம் உபரி நீர் செல்லக்கூடிய தரைப்பாக்கம் சாலை வழியாக முகமது ரபிக் மற்றும் அவரது மனைவி ரிஸ்வான், 10 வயது பெண் குழந்தை தனது காரில் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செம்பரம்பாக்கம் உபரி நீர் தரைப்பாக்கம் சாலை ஆற்று தண்ணீரில் வேகமாக அடித்து வந்துள்ளது. அதில் சிக்கிய கார் 50 மீட்டர் தொலைவில் அடையாறு ஆற்றில் அடித்து செல்லப்பட்டு முட்புதர் செடியில் மாட்டிக் கொண்டது.
அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உதவியுடன் அவர்களை கயிறு கட்டி மேலே இழுத்து மீட்டனர். பின்பு அங்கு சென்ற மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் மூவரையும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும் விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் காரை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.