திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறநகர் மார்கத்தில் புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்க்க ஏதுவாக ஒப்பந்ததாரர் மூலம் தற்காலிக கூடாரங்கள் மற்றும் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இப் பணிகள் முடிந்து விட்ட நிலையில் தற்காலிக கூடாரங்கள் மற்றும் கழிப்பிடங்கள் அகற்றப்பட்டது. இருப்பினும் கழிப்பிடங்களுக்கு அருகில் இருந்த செப்டிக் தொட்டி அகற்றாமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் அவ் வழியாக விவசாயிகள் தங்களது கால்நடைகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்த நிலையில் ஜோதிநகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் பசுமாடு மேய்ச்சலுக்கு சென்று மூன்று நாட்களாக வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடி பார்த்த போது செப்டிக் தொட்டியில் விழுந்து மூச்சித்திணறி இறந்தது தெரியவந்தது. சாலைப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக அமைத்த செப்டிக் தொட்டி மூடாமல் ஒப்பந்ததாரர் சென்றதால் அதில் தவறி விழுந்து மாடு இறந்ததாக விவசாயி குற்றம் சாட்டியுள்ளாா்.இதுகுறித்து அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயி கோாிக்கை விடுத்துள்ளாா்