உலகில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வரும் உயிாினங்களிள் , மிகவும் முதன்மை வாய்ந்தவையாக கருதப்படுவது ஆமைதான் . அதன்படி
உலகின் வயதான ஆமை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொண்ட
ஆமையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது .
செயின்ட் ஹெலேனா தீவில் நீண்டநாட்களாக உலகின் வயதான ஆமை என்ற சாதனையை பெற்றுள்ள ஜோனதன் ஆமை வசித்து வருகிறது.இதன் பிறந்த தேதி சாிவர தொியவில்லை இருந்தபோதிலும், இது 1832 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என ஆய்வாளா்கள் உரைக்கின்றனா்.
இந்த ஜோனதன் ஆமை 1882 ஆம் ஆண்டு செயின்ட் ஹெலேனா தீவின் ஆளுநராக பதவி வகித்த சா் வில்லியம் கிரே வில்சன் என்பவா் மூலமாக ஜோனதன் இந்த தீவிற்கு கொண்டுவரப்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை இந்த ஆமை ஆளுநா் மாளிகையிலேயே வசித்து வருகிறது. அதன்படி டிசம்பா் மூன்றாம் தேதி ஒவ்வொறு வருடமும் இதன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஜோனதன் இதன் 191 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.இதனை பாிசோதித்த மருத்துவா்கள் இந்ந ஆமையானது இரண்டு நூற்றாண்டுகளை கடந்து மூன்றாவது தலைமுறையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் பொதுமக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது . இதனை காணவரும் பொதுமக்கள் இதற்கு காய்கறிகள் நிறைந்த கேக் வெட்டி இவா்களும் கொண்டாடி வருகின்றனா்.நல்ல உடல்நிலையோடு இருந்துவரும் ஜோனதன் இன்னும் சில ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் என்று ஆய்வாளா்கள் தொிவித்துள்ளனா்.